- ஒட்டன்சத்திரம்
- காந்தி காய்கறி
- சந்தை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஒட்டன்சத்திரம், தமிழ்நாடு...
- தின மலர்
ஒட்டன்சத்திரம், ஏப். 12: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சியடைந்து விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மார்க்கெட்டாகும். இந்த மார்கெட்டிற்கு ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள கிராம பகுதிகள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செயப்படுகின்றன. இங்கிருந்து தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சில்லறை விற்பனைக்காகவும், மொத்த விற்பனைக்காகவும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதனால் இந்த மார்க்கெட்டில் தினந்தோறும் சுமார் ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ஒட்டன்சத்திரம் மார்கெட்டிற்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து, இதன் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மாதங்களில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனையானது. ஆனால் தற்போது வரத்து அதிகரிப்பால் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.30 வரை மட்டுமே விற்பனை ஆகிறது. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
The post ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.
