×

தோப்புத்துறை பள்ளி மாணவர்கள் சமத்துவ உறுதி மொழி ஏற்பு

வேதாரண்யம், ஏப். 12: தோப்புதுறை நகராட்சி தொடக்கப்பள்ளியில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்ெகாள்ளப்பட்டது. வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை நகராட்சி பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் புயல் குமார் தலைமையில் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் தொடர்ந்து நடக்கும் சமூக அடக்குமுறைக்கு எதிராகவும்,

ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காக தொடர்ந்து போராடி சாதி வேறுபாடுகள் எதுவும் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் தொடர்ந்து பாடுவோம் என சமத்துவ நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணிக்கம் முருகானந்தம் இந்திராணி, அனிதா, கலைச்செல்வி உள்ளிட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post தோப்புத்துறை பள்ளி மாணவர்கள் சமத்துவ உறுதி மொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Thoputhurai School ,Vedaranyam ,Thoputhurai Municipal Primary School ,Thoputhurai Municipal School ,Day ,Puyal Kumar ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை