×

தர்மபுரியில் கோடை மழை

தர்மபுரி, ஏப்.12: தர்மபுரி மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் மக்களை வாட்டி வதைக்க தொடங்கியது. பகலில் வாகனங்களில் கூட செல்ல முடியாத அளவுக்கு வெப்பக்காற்று வீசியது. இதனால் பகலில் மக்கள் வியர்வை குளியலில் நனைந்தபடி பயணிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த வெப்பத்தை தணிக்க கோடை மழை பெய்யாதா? என மக்கள் ஏங்கி தவித்தனர். இதற்கிடையே பென்னாகரம், அரூர், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. ஆனால் தர்மபுரியில் மழை பெய்யவில்லை. நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்த நிலையில், திடீரனெ இடி மின்னலுடன் மழை பெய்தது.

இந்த மழை அரை மணிநேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தொப்பூர், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பென்னாகரம், இலக்கியம்பட்டி, ராமன்நகர், கலெக்டர் அலுவலகம், ஒட்டப்பட்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் மழை பரவலாக பெய்தது. இதனால் இரவு பூமி குளிர்ந்து காணப்பட்டது. ஆனால் வீடு அலுவலகங்களில் வெப்பமாக காணப்பட்டது. ஆனாலும் நேற்று 98.6 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருந்தது.

The post தர்மபுரியில் கோடை மழை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை