×

தீவிரவாதி சுட்டு கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் கிஸ்த்வார் மாவட்டத்தில் சத்ரு காட்டுப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவலை அடுத்து ராணுவமும், ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. இந்த நடவடிக்கையின்போது தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனை தொடர்ந்து வீரர்கள் கொடுத்த பதிலடியில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையானது தீவிரமாக நடந்து வருகின்றது.

The post தீவிரவாதி சுட்டு கொலை appeared first on Dinakaran.

Tags : Jammu ,Chatru ,Kishtwar district ,Jammu and Kashmir ,Army ,Jammu and Kashmir Police ,Dinakaran ,
× RELATED அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’,...