×

வழக்கமான உடல் பரிசோதனைக்காகவே டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி: மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், 2026 தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இன்று தமிழ்நாடு வந்துள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, டிடிவி தினகரன் சந்திப்பார் என தகவல் வெளியானது.

அதிமுக இணைப்பு குறித்த பேச்சு தீவிரமடைந்துள்ள நிலையில், அமித் ஷாவை டிடிவி தினகரன் சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் வழக்கமான உடல் பரிசோதனைக்காகவே டிடிவி தினகரன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.. மேலும் பரிசோதனைகள் முடிந்தபின்னர் டிடிவி தினகரன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வழக்கமான உடல் பரிசோதனைக்காகவே டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி: மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : TTV Dinakaran ,Chennai ,Amma Makkal Munnetra ,Kazhagam ,General Secretary ,TTV ,Dinakaran ,Tamil Nadu ,2026 elections ,Union Home Minister ,Amit Shah ,
× RELATED சென்னையில் தெருக்கள், சாலைகளை தரமாக...