- பண்ருட்டி
- நெல்லிக்குப்பம்
- ஆல்கஹால் விலக்கு அமலாக்குதல்
- மேல்பட்டம்பாகம்
- புதுச்சேரி
- மகாவீர ஜெயந்தி
- பன்ருதி
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி, உள்ளிட்ட பகுதிகளில் மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி
செல்வதை தடுக்கும் விதமாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா மேற்பார்வையில், மது விலக்கு அமல் பிரிவு உதவி காவல் ஆய்வாளர்கள் ராஜா, கிருஷ்ணமூர்த்தி, அருணகிரி, சேகர், செல்வகுமார் மற்றும் போலீசார், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள முந்திரி தோப்பில் சாராயம் காய்ச்சி கொண்டிருந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மதுபாட்டில்கள் விற்ற மடப்பள்ளி மேற்கு தெருவை சேர்ந்த ராஜவேல் மகன் சுப்பிரமணியன்(70), காட்டுக்கூடலூர் வடக்கு தெருவை சேர்ந்த பாவாடை மகன் சேட்டு(55) ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து மதுபாட்டில்கள் மற்றும் மொபட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post பண்ருட்டி அருகே முந்திரி தோப்பில் புதுவை மதுபாட்டில்கள் விற்ற 2 முதியவர் கைது appeared first on Dinakaran.
