- புல்வாய்குளம் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
- சாயல்குடி
- கமல்
- கோட்டைமேடு
- சேதுபதி நகர்
- காமதி ஒன்றியம்
- சந்திரசேகரன்
- முடகுலாதர் யூனியன்
- செல்வநாயகபுரம்
- லோகநாதன்
- திருவரங்கம்
- முத்து
- கடலாடி ஒன்றியம்
- கன்னிராஜபுரம்
- தின மலர்
சாயல்குடி, ஏப். 11: கமுதி ஒன்றியம் கோட்டைமேடு, சேதுபதி நகரை சேர்ந்த கமல், முதுகுளத்தூர் ஒன்றியம், செல்வநாயகபுரம் சந்திரசேகரன், திருவரங்கம் லோகநாதன், கடலாடி ஒன்றியம், கன்னிராஜபுரம் முத்து ஆகியோர் மாற்றுத்திறனாளிகள். இவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக இணைப்பு சக்கரம் பொருத்திய மோட்டார் வாகனம் வழங்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மோட்டார் வாகனம் வழங்க அமைச்சர் பரிந்துரை செய்தார்.
இதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கன்னிராஜபுரம் முத்துவிற்கு அவரது வீட்டிற்கே சென்று வழங்கப்பட்டது. இந்நிலையில் முதுகுளத்தூர் அருகே புல்வாய்குளம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் – தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார்.
பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மேற்கூறிய மாற்றுத்திறனாளிகள் கமல், சந்திரசேகரன், லோகநாதன் ஆகியோருக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய நவீன மோட்டார் வாகனங்களை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து வருவாய், கூட்டுறவு, வேளாண்மை, ஊரக வளர்ச்சி, சமூக நலத்துறை உள்ளிட்ட பிற துறைகள் சார்பில் 91 பேருக்கு ரூ.1 கோடியே 43 லட்சத்து 79 ஆயிரத்து 676 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
The post புல்வாய்குளம் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.1.43 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.
