- பரமக்குடி
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- யூனியன் அரசு
- மாவட்ட செயலாளர்
- பெருமாள்
- மாவட்ட நிர்வாகக் குழு…
- தின மலர்
பரமக்குடி, ஏப். 11: பரமக்குடியில் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். இதில் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ராஜன்,சுப்பிரமணியன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சிவக்குமார், ருக்மாங்கதன், சட்டக்களம் ஆசிரியர் முகமது ஜின்னா, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து பேசினர். இதில், ஒன்றிய பொறுப்பாளர் விஜயபாஸ்கர், எமனேஸ்வரம் மேற்கு பகுதி செயலாளர் நாகநாதன், நகர் துணைச் செயலாளர்கள் ஹரிகரன், கோட்டைச்சாமி, நகர் நிர்வாக குழு உறுப்பினர் நாகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post இ.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
