×

காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ராமேஸ்வரத்தில் நூதன ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம், ஏப். 11: ஒன்றிய அரசு சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தியதை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே கண்டன நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா தலைவர் வெங்கேடஸ்வரி தலைமை வகித்தார். செயலாளர் ஆரோக்கிய நிர்மலா, பொருளாளர் சுமதி, நிர்வாகிகள் சகாயம், சக்திகனி, நாகராணி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

பெண்கள் சமையல் காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, விறகு அடுப்பை வைத்து விலை உயர்வுக்கு எதிராக நூதன போராட்டம் நடத்தினர். தொடர்ந்து சமையல் எரிவாயு விலையை உயர்த்தி வரும் ஒன்றிய அரசை கண்டித்தும், பெட்ரோல் டீசல் தயாரிக்க பயன்படும் கச்சா எண்ணெயில் கலால் வரி உயர்த்தியுள்ளதை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

The post காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ராமேஸ்வரத்தில் நூதன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Centenary demonstration ,Rameshwar ,Rameshwaram ,Democratic Mother Society ,Union Government ,president ,Taluga ,Venkedaswari ,Secretary of Health ,Centennial demonstration in Rameshwar ,gas cylinder ,Dinakaran ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ெகாடுத்த...