×

நீர் நிலைகளின் கொள்ளளவை அதிகப்படுத்த ஓடை, பாசன வாய்க்கால்களில் ரூ.50 லட்சத்தில் தூர்வாரும் பணி எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்

தா.பழூர், ஏப். 11; நீர் நிலைகளின் கொள்ளளவை அதிகப்படுத்த தா.பழூரில் ரூ.50 லட்சத்தில் தூர்வாரும் பணியை எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட அருள்மொழி மற்றும் காரைக்குறிச்சி கிராமத்தில் பாசன வாய்க்கால், ஓடை தூர்வாரி கொள்ளளவு அகலப்படுத்தும் பணியை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.

இதில் அருள்மொழி கிராமத்தில் அமைந்துள்ள பிரதான பொன்னாறு வாய்க்காலை ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாருதல், காரைக்குறிச்சியில், சித்தமல்லி நீர்த்தேக்க உபரிநீர் வடிகால் ஓடையை, ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாருதல் ஆகிய பணிகளை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். இதில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் தமிழரசன், உதவி பொறியாளர்கள் நவலடியான், ஆகாஷ், பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் இராமதுரை, அவைத்தலைவர் சூசைராஜ், பொருளாளர் நாகராஜன், ஒன்றிய துணை செயலாளர்கள் இந்துமதி நடராஜன், இராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள், கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தூர்வாரும் பணி மூலம் சுமார் 15 க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஆற்று பாசனம் மூலம் தடை இன்றி தண்ணீர் கிடைத்து விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும் என விவசாயிகள் பெருமிதமாக தெரிவித்தனர்.

The post நீர் நிலைகளின் கொள்ளளவை அதிகப்படுத்த ஓடை, பாசன வாய்க்கால்களில் ரூ.50 லட்சத்தில் தூர்வாரும் பணி எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : MLA Kannan ,Tha.Pazhur ,Arulmozhi ,Karaikurichi ,Ariyalur ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி