- பெண்கள்
- அணி
- ஆஸ்திரேலியா
- பெர்த்
- புது தில்லி
- பெண்கள் ஹாக்கி அணி
- பன்னாட்டு ஹாக்கி கூட்டமைப்பு
- ப்ரோ லீக்
- தின மலர்
புதுடெல்லி: இந்திய மகளிர் ஹாக்கி அணி, சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் புரோ லீக் போட்டியில் பங்கேற்பதற்கு முன் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறது. ஏப்ரல் 26ம் தேதி முதல் மே 4ம் தேதி வரையில் 5 போட்டிகளில் விளையாடும் வகையில் அட்டவணையை வெளியிட்டுள்ளன. அதில், இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஆஸ்திரேலியா ஏ மகளிர் அணியுடன் பெர்த் மைதானத்தில் வரும் 26, 27ம் தேதிகளில் மோதுகிறது. இது ஒரு பயிற்சி போட்டியாக இருக்கும். தொடர்ந்து அதே பெர்த் மைதானத்தில் மே 1, 3, 4ம் தேதிகளில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொள்கிறது.
இந்த 3 போட்டியிலும் அனல் பறக்கும். தரவரிசை பட்டியலில் 9வது இடத்தில் இருக்கும் இந்திய மகளிர் அணி, 5வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. ஆனால், கடந்தாண்டு நடந்த சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் புரோ லீக்கில் ஆஸ்திரேலியாவை இந்தியா 1-0 என வீழ்த்தியிருந்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வரலாற்று வெற்றியை இந்திய அணி பெற்றது. அதனால், இந்த தொடரில் இந்திய மகளிர் அணி ஆதிக்கம் செலுத்தும் என தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
The post மே 1, 3, 5ல் பெர்த்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவுடன் மோதல் appeared first on Dinakaran.
