- அர்ஜுன் சம்பத்
- மணி மண்டபம்
- அம்பேத்கர்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- இந்து மதம்
- மக்கள் கட்சி
- நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: அம்பேத்கர் சிலைக்கு காவி வேட்டி, விபூதி மற்றும் குங்குமம் அணிவிக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை ஏற்று அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் ஏப்ரல் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்க இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 25 பேருக்கு அனுமதி வழங்கக் கோரியும், போதுமான பாதுகாப்பை வழங்கவும் காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில், அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள அனுமதி வழங்கக்கோரி மார்ச் 20ம் தேதி காவல்துறைக்கு மனு அளிக்கப்பட்டது.
அதில், பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, யாருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்ப மாட்டோம், அம்பேத்கரின் சிலைக்கு காவி வேட்டி, சந்தன திலகம், விபூதி மற்றும் குங்குமம் அணிய மாட்டோம், வாத்தியங்கள் இசைக்க மாட்டோம், போக்குவரத்துக்கு இடையூறு செய்ய மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதனால், காவல்துறை அனுமதி வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அனுமதி வழங்கினால் பொது அமைதி பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் அளித்த உத்தரவாதத்தை ஏற்று, பட்டினப்பாக்கம் காவல்துறை வாகனத்தில் சென்று பிறந்தநாள் நிகிழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும். உத்தரவாதம் மீறப்பட்டால் அது தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டார்.
The post அம்பேத்கர் சிலைக்கு காவி, விபூதி அணிவிக்க மாட்டோம் என அர்ஜூன் சம்பத் உத்தரவாதத்தால் மணிமண்டபம் செல்ல அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
