×

திருமங்கலம் அருகே மர்மநோய் தாக்கி 40 கோழி, சேவல்கள் சாவு

திருமங்கலம்: திருமங்கலம் அருகே மர்மநோய் தாக்கி 40க்கும் மேற்பட்ட கோழி, சேவல்கள் உயிரிழந்துள்ளதால் கோழி வளர்ப்போர் பீதியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள மேலஉரப்பனூர் இந்திராகாலனியை சேர்ந்தவர்கள் முத்துகருவு, கார்த்திக், முருகாமணி, ஞானசேகரன் ஆகியோர் கோழி வளர்த்து வருகின்றனர். நேற்று இவர்களுக்கு சொந்தமான கோழி மற்றும் சேவல்கள் வழக்கம் போல் அருகேயுள்ள வயல்வெளிகளில் மேய்ந்து விட்டு இரவு வீட்டிற்கு திரும்பின. இவற்றை கூடைகளில் போட்டு உரிமையாளர்கள் அடைத்துள்ளனர். இன்று காலை கூடையை திறந்து கோழிகளை வெளியேவிட பார்த்தபோது 4 பேருக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட கோழி மற்றும் சேவல்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த இவர்கள் இதுகுறித்து உரப்பனூர் ஊராட்சி தலைவர் யாசோதை சாமிநாதன், விஏஒ ஆனந்த் ஆகியோருக்கு தகவல்கள் கொடுத்துள்ளனர். கிராமத்தில் ஒரே நாளில் 40க்கும் மேற்பட்ட கோழி, சேவல்கள் உயிரிழந்துள்ளது உரப்பனூர் மக்களிடம் சோகத்தையும்,  பீதியையும் ஏற்படுத்தியுள்ளது….

The post திருமங்கலம் அருகே மர்மநோய் தாக்கி 40 கோழி, சேவல்கள் சாவு appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Madurai District ,Dinakaran ,
× RELATED குடும்ப பிரச்னையில் தீர்வு கேட்ட ஐடி...