×

தகவல் அறியும் உரிமை சட்டத்தை அழிக்கும் டிஜிட்டல் தரவுகள் பாதுகாப்பு சட்ட பிரிவை நீக்க வேண்டும்: இந்தியா கூட்டணி வலியுறுத்தல்

புதுடெல்லி: தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகளை நோக்கி பொதுமக்கள் அதிகாரப்பூர்வமாக கேள்வி கேட்கும் சட்டப்பூர்வ உரிமையை வழங்குகிறது. ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.

தற்போது பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு, டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு சட்ட மசோதா கொண்டு வந்துள்ளது. இது கடந்த 2023ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த சட்டம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பலவீனப்படுத்துவதாக உள்ளது, எந்தவொரு தனிநபரின் தனிப்பட்ட தகவல்களை வௌியிடுவதை தடுக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு சட்டத்தை நீக்க வலியுறுத்தும் கடிதத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்பி டி.ஆர்.பாலு, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சிபிஐ(எம்) ஜான் பிரிட்டாஸ், உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர். அந்த கடிதத்தை தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கொடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் கவுரவ் கோகாய் தெரிவித்துள்ளார்.

The post தகவல் அறியும் உரிமை சட்டத்தை அழிக்கும் டிஜிட்டல் தரவுகள் பாதுகாப்பு சட்ட பிரிவை நீக்க வேண்டும்: இந்தியா கூட்டணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : India Alliance ,New Delhi ,Congress ,Union ,BJP ,Dinakaran ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது