×

மாதேஸ்வரன் எம்பி வீட்டில் தீ விபத்து

சேந்தமங்கலம்: நாமக்கல் எம்பியான கொமதேக மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். இவரது சொந்த கிராமமான சேந்தமங்கலம் அடுத்த பொட்டணத்தில் உள்ள வீட்டில், தாயார் வருதம்மாள் வசிக்கிறார்.

நேற்று அதிகாலை தூங்கிக்கொண்டிருந்த வருதம்மாள், திடீரென அறையில் புகை வருவதை கண்டு எழுந்து பார்த்தார். அப்போது, ஏசி மிஷினில் தீப்பிடித்து எரிந்துள்ளது. உடனடியாக வெளியே வந்து சத்தம் போட்டுள்ளார். தகவலறிந்து நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

அதற்குள் மர சாமான்கள் மற்றும் ஏசி மிஷின் எரிந்து சாம்பலானது. இதனிடையே சிலர், எம்பியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வதந்தி பரப்பினர். இதை மறுத்த நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் பொய்யான தகவல் பரப்புவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

The post மாதேஸ்வரன் எம்பி வீட்டில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Matheswaran ,Senthamangalam ,Namakkal ,Komadeka ,Varudhammal ,Pottanam ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...