×

பண்ணாரியம்மன் குண்டம் திருவிழாவில் போதையில் பணிக்கு வந்த 2 ஏட்டுகள் சஸ்பெண்ட்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி மாரியம்மன் கோயிலில் கடந்த 8ம் தேதி குண்டம் விழா நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 7ம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டனர்.

இதில், ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த தலைமை காவலர்கள் சுரேஷ், பிரபாகரன் ஆகியோர் உரிய நேரத்தில் பணிக்கு வராமலும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளாமலும் காரில் சுற்றித்திரிந்தனர்.

இதனை கண்ட திருப்பூர் மாவட்டம் பல்லடம் போலீஸ் டிஎஸ்பி, தலைமை காவலர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தினார். இதில், அவர்கள் பணி நேரத்திற்கு முறையாக வராததும், மது போதையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஈரோடு ஏடிஎஸ்பி விவேகானந்தன் உத்தரவின்படி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில் இருவரும் போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. துறைரீதியான விசாரணை அறிக்கையின்படி, தலைமை காவலர்கள் சுரேஷ், பிரபாகரன் இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி சுஜாதா நேற்று முன்தினம் மாலை உத்தரவிட்டார்.

The post பண்ணாரியம்மன் குண்டம் திருவிழாவில் போதையில் பணிக்கு வந்த 2 ஏட்டுகள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Pannariyamman Kundam festival ,Erode ,Kundam Festival ,Pannari Maryamman Temple ,Sathyamangalam ,Pannariamman Kundam Festival ,
× RELATED கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்...