×

திருக்கல்யாணத்தில் ஆண்டாள் அணிய திருப்பதி பெருமாள் வஸ்திரம் வருகை

வில்லிபுத்தூர்: திருக்கல்யாண உற்சவத்தின்போது, ஆண்டாள் அணிந்து கொள்ள, திருப்பதியில் இருந்து சீனிவாசப் பெருமாள் அணிந்த வஸ்திரம் இன்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வரப்படுகிறது. விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், திருக்கல்யாண விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நாளை மாலை, கோயில் நுழைவாயில் அருகே உள்ள திருஆடிப்பூர கொட்டகையில் விமரிசையாக நடைபெற உள்ளது. இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கோயில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், திருக்கல்யாண உற்சவத்தின்போது, ஆண்டாள் அணிய, திருப்பதியில் சீனிவாசப் பெருமாள் அணிந்த பட்டு வஸ்திரம் இன்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த பட்டு வஸ்திரத்தை, ஆண்டாள் கோவில் நிர்வாகத்தினர் உரிய மரியாதையுடன் பெற்றுக் கொள்வார். நாளை திருக்கல்யாணத்தின்போது ஆண்டாளுக்கு சீனிவாசப் பெருமாளின் பட்டு வஸ்திரம் அணிவிக்கப்படும். திருக்கல்யாணத்தை பார்க்க பக்தர்கள் அதிகளவில் கூடுவர் என்பதால், அனைவரும் காணும் வகையில் பெரிய எல்இடி திரைகள் வைக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள், கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

The post திருக்கல்யாணத்தில் ஆண்டாள் அணிய திருப்பதி பெருமாள் வஸ்திரம் வருகை appeared first on Dinakaran.

Tags : Andal ,Thirukalyanam ,Villiputhur ,Srinivasa Perumal ,Tirupati ,Srivilliputhur ,Thirukalyanam festival ,Andal Temple ,Villiputhur, Virudhunagar district ,
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில்...