×

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரிஅனந்தன் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி அஞ்சலி

அரியலூர், ஏப். 10: அரியலூரில் மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான குமரிஅனந்தன் படத்துக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. அரியலூர் காமராஜர் சிலை முன் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு நகர காங்கிரஸ் தலைவர் சிவகுமார், துணைத் தலைவர் சுப்பிரமணியன், செயலர் அருள்சந்திரசேகர், மாவட்ட துணைத் தலைவர் கலைச்செல்வன், செயலர் செந்தில், வட்டாரத் தலைவர் கர்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவுத் தலைவர் நிக்கோலஸ்ராஜ் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

The post காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரிஅனந்தன் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Congress party ,Congress ,Kumari Anandan ,Ariyalur ,president ,Sivakumar ,vice president… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை