×

அரியலூர் மாவட்ட எஸ்சி, எஸ்டி பிரிவு இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

அரியலூர், ஏப். 10: எஸ்சி, எஸ்டி பிரிவு இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 10, 12ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சி திட்டங்கள் வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது சென்னை, வேளச்சேரியிலுள்ள விவேஷியஸ் அகடாமி (Vivacious Academy) நிறுவனம் மற்றும் தாட்கோ இணைந்து டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சியிடுவதற்கான (Diploma in Aari Embroidery and Hand Printing On Textiles) பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 முதல் 30 வயது வரையுள்ளவர்களாகவும், குடும்ப வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்கவேண்டும். இப்பயிற்சி கால அளவு 30 நாட்களாகும். மேலும் சென்னை வேளச்சேரியில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கும் விடுதி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் NSDI (National Skill Development of India) அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சி பெற www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகம் அறை எண்.225, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியரகம் அரியலூர், தொலைபேசி எண்.04329-228315-னை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post அரியலூர் மாவட்ட எஸ்சி, எஸ்டி பிரிவு இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : SC ,Ariyalur district ,Ariyalur ,Collector ,Rathinasamy ,Tamil Nadu ,Adi Dravidar… ,district ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை