×

சமரச மையம் சார்பில் தென்காசியில் விழிப்புணர்வு பேரணி

தென்காசி,ஏப்.10: தென்காசியில் நேற்று மாவட்ட சமரச மையம் சார்பில் சமரச விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜவேல் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து துவங்கிய சமரச விழிப்புணர்வு பேரணி தென்காசி-நெல்லை சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை வரை சென்று பின்னர் அதே சாலையில் மீண்டும் நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்தது.

கூடுதல் மாவட்ட நீதிபதி மனோஜ்குமார், மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி கதிரவன், முதன்மை சார்பு நீதிபதி கிறிஸ்டல் பபிதா, கூடுதல் சார்பு நீதிபதி மாரீஸ்வரி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி குரு, குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி பொன்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமரச விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் வழங்கினர். பேரணியில் அட்வகேட் அசோசியேசன் தலைவர் மாடக்கண்ணு, செயலாளர் கார்த்திக்குமார், மூத்த வழக்கறிஞர்கள் மாடசாமி பாண்டியன், கைலாசம், பார் அசோசியேஷன் செயலாளர் அருண் மற்றும் வழக்கறிஞர்கள், தங்கப்பழம் சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் சமரச விழிப்புணர்வு பிரசாரக் கூட்டம் நீதிமன்ற வளாக கூட்ட அரங்கில் நடந்தது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேல் பேசுகையில், ‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சமரசம் மையம் குறித்து அனைத்து பகுதி மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் பேசுகின்ற மொழியில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வருங்காலங்களில் ஆன்லைன் மூலமாகவும் இரு தரப்பினரையும் தொடர்பு கொண்டு சமரசம் செய்யலாம் என்ற நிலை உருவாகும். சமரசம் என்பது இருவருக்கும் வெற்றி கிடைப்பது தான். இதனால் காலநேரம் மிச்சம் ஆவதோடு பணவிரயமும் தடுக்கப்படும். நமது மாவட்ட சமரச மையத்தில் பயிற்சி பெற்ற ஐந்து வழக்கறிஞர்கள் உள்ளனர். மாவட்ட சமரச மையத்தை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்தி தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்’ என்றார்.

அட்வகேட் அசோசியேசன் செயலாளர் கார்த்திக் குமார் வரவேற்றார். முதன்மை சார்பு நீதிபதி கிறிஸ்டல் பபிதா, சமரச மைய வழக்கறிஞர் கைலாசம், சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர் சமரசம் குறித்து சிறப்புரையாற்றினர். அட்வகேட் அசோசியேசன் தலைவர் மாடக்கண்ணு நன்றி கூறினார்.

The post சமரச மையம் சார்பில் தென்காசியில் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Mediation Center ,District Mediation Center ,District Chief Judge ,Rajavel ,District ,Combined ,Court ,Complex ,Nellai… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை