×

குட்கா விற்ற 2 கடைகளுக்கு சீல்

தர்மபுரி, ஏப்.10: காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி மற்றும் பாலக்கோடு போலீஸ் சரவணன் உள்ளிட்ட குழுவினர் இணைந்து, பாலக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பீடா கடைகள், மொத்த விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், ஜெர்தலாவ் ஊராட்சி சுகர்மில் பகுதியில் ஒரு மளிகை கடையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததை கண்aடுபிடித்து பறிமுதல் செய்தனர்.

பாலக்கோடு போலீஸ் எஸ்ஐ கோகுல், கடை விற்பனையாளர் மீது வழக்கு பதிவு செய்து, குட்காவை பறிமுதல் செய்தார். மேலும், அந்த கடைக்கு சீல் வைத்து, ₹25ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன், பாலக்கோடு கம்மாளர் தெருவில், பெட்டிகடையில் குட்கா விற்றவருக்கு ₹25ஆயிரம் அபராதம் விதித்து, கடை இயங்க தடை விதிக்கப்பட்டது.

The post குட்கா விற்ற 2 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Karimangalam ,Palacode Union Food ,Safety Officer ,Nandagopal ,Morapur ,Union Food Safety Officer ,Tirupathi ,Palacode Police ,Saravanan ,Palacode ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை