×

வக்பு சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

 

ராமேஸ்வரம்,ஏப்.10: ராமேஸ்வரத்தில் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ராமேஸ்வரம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் செந்தில்வேல் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முருகானந்தம், மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் வடகொரியா, சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் ஜீவானந்தம், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post வக்பு சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Communist Party of India ,Rameswaram Head Post Office ,Union Government of India.… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை