×

தோட்டக்கலைத்துறை மாணவர்கள் குன்னூர் பகுதி விவசாய நிலங்களில் கள ஆய்வு

 

ஊட்டி, ஏப். 10: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து ஊரக தோட்டக்கலை பணி அலுபவம் செயல்பாட்டிற்கு தோட்டக்கலை இளம் அறிவியல் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் நீலகிரி மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர்.

இவர்கள், தோட்டக்கலைத்துறை குன்னூர் வட்டாரம் தோட்டக்கலை உதவி இயக்குநர் விஜயலட்சுமி, மற்றும் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் குழு ஒருங்கிணைப்பாளர் கவிதா ஆகியோர் அறிவுறுத்தலின் படி குன்னூர் வட்டார கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் சாகுபடி முறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து கேட்டு வருகின்றனர்.

விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்பங்களையும் தெரிவித்து வருகின்றனர். மேலும், பயிர் சுழற்சி முறையில் வீட்டுக்காய்கறி தோட்டம் பயன்பாட்டை விளக்கினர். இச்செயல் விளக்கத்தில் தோட்டக்கலை இளம் அறிவியல் மாணவர்களான மது அபிலன், பாலாஜி, கவியரசு, ஹரிஹரன், காளிதாசன், சந்துரு, தாமோதரன் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post தோட்டக்கலைத்துறை மாணவர்கள் குன்னூர் பகுதி விவசாய நிலங்களில் கள ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Ooty ,Tamil Nadu Agricultural University ,Coimbatore ,Nilgiris ,Horticulture Department ,Coonoor Circle ,Horticulture… ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி