×

சமையல் காஸ் விலை உயர்வு ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்

மதுரை, ஏப். 10: சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து, மாதர் சங்கத்தினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய பாஜ அரசு வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில் மதுரை சொக்கலிங்க நகர் பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பகுதி செயலாளர் மல்லிகா ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். பாக்யராஜ் தலைமை வகித்தார். 20க்கும் மேற்பட்ட பெண்கள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து விலை உயர்வுக்கு எதிராக ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து சமையல் எரிவாயு விலையை உயர்த்தி வரும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும், பெட்ரோல் டீசல் தயாரிக்க பயன்படும் கச்சா எண்ணெயில் கலால் வரி உயர்த்தியுள்ளதை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். மாநிலக்குழு உறுப்பினர் விஜயராஜன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

The post சமையல் காஸ் விலை உயர்வு ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Mathar Sangam ,Union BJP government ,Marxist… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை