×

தழைக் கூளம் அமைக்க விவசாயிகளுக்கு பயிற்சி

நத்தம், ஏப். 10: நத்தம் அருகே ரெட்டியபட்டியில் மதுரை வேளாண்மை கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர் மதன் மித்ரன் ஊரக பணி அனுபவ திட்டத்தின் கீழ் நத்தம் அருகே ரெட்டியப்பட்டியில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். இங்குள்ள தனியார் தோட்டத்தில், தென்னையில் தழைக்கூளம் அமைத்தல் பற்றி செயல் விளக்கம் செய்து காட்டி, இதன் மூலம் பெறப்படும் நீர் சேகரிப்பின் பயன் பற்றி எடுத்துரைத்தார். மேலும் இதனால் களைச் செடிகள் முளைப்பது தடுக்கப்படுகிறது. இதை செய்வதற்கு அருகிலுள்ள குப்பைகளே போதுமானது. அந்த குப்பைகளை தென்னையின் தூரை சுற்றி வட்ட வடிவில் தழைக்கூளம் அமைத்தால் போதும் நீர் ஆவியாவதை குறைக்கும் என அவர் விளக்கம் அளித்தார்.

The post தழைக் கூளம் அமைக்க விவசாயிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Natham ,Madurai Agricultural College ,Madan Mithran ,Redtiyapatti ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா