×

குமரி அனந்தன் மறைவு காங்கிரசார் மலரஞ்சலி

திண்டுக்கல், ஏப். 10: முன்னாள் காங். மாநிலத் தலைவர் குமரிஅனந்தன் மறைவுக்கு, திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி கூட்டம் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாகிர் உசேன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், மாவட்டத் துணைத் தலைவர் அரபு முகமது, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மச்சக்காளை, மாநில பொதுக்குழு உறுப்பினர் குப்புசாமி, மாநில பேச்சாளர் பாலு, நிர்வாகிகள் முபாரக், மணிவண்ணன், ஹபிப் பகுதி தலைவர் முகமது ரபீக் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாகிர் உசேன் பேசினார்.

The post குமரி அனந்தன் மறைவு காங்கிரசார் மலரஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Congress ,Kumari Anandan ,Dindigul ,president ,Zakir Hussain ,Former ,Chokkalingam ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை