×

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 3 பேர் விடுதலை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மார்ச் 19ம் தேதி கடலுக்கு சென்ற மீனவர்களான சங்கர், அர்ஜுனன், தர்ம முனியாண்டி ஆகிேயாரை விசைப்படகுடன் சிறைபிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் காவல் நேற்று முடிந்ததால், ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஸ்கரன், மீனவர்கள் 3 பேரையும் எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்து உத்தரவிட்டார். மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

The post இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 3 பேர் விடுதலை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Rameswaram ,Shankar ,Arjunan ,Dharma Muniyandi Aggier ,Jaffna ,Home Guard Court ,
× RELATED மூணாறில் இரவில் வெப்பநிலை மைனஸ் 1...