- சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
- சேலம்
- பல்கலைக்கழக
- செல்வி.
- கே
- ஸ்டாலின்
- திராவிடர் விடுதலை சங்கம்
- திராவிடர் விடுதலை சங்கம்
- கோலத்தூர் மணி
- தின மலர்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க, பல்கலைக்கழக வேந்தராகியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திராவிடர் விடுதலை கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இந்த தீர்ப்பின் வழியாக தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் என்பதோடு, ஆளுநரின் அதிகார வரம்புகள் என்ன என்பது குறித்தும், ஒப்புதல் வழங்குவதற்கான கால வரையறை குறித்தும் தெளிவுபடுத்தி இருக்கிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், குறிப்பாக ஒன்றிய ஆளுங்கட்சி ஆளாத மாநிலங்களுக்கு ஒரு புதிய தெம்பினை ஊட்டி இருக்கிறார்.
அதற்காக மனம் நெகிழ்ந்து பாராட்டுகிறோம். உயர்கல்வியில் உள்ள அனைத்து அதிகாரங்களும் தனக்கு மட்டுமே என்ற ஆணவத்தோடு இருந்த ஆளுநர், துணைவேந்தர்களாக இந்துத்துவாதிகளை நியமிப்பதும், அவர்கள் வழியாக தேவையற்ற இந்துத்துவ செயல்பாடுகளை நிறைவேற்றுவதும், தனியாக துணைவேந்தர்கள் கூட்டத்தை நடத்துவதும், பெரியார், அண்ணா, கலைஞர் ஆய்வுகளுக்காக எழுதப்படுகிற நூல்களுக்கு கூட முன் அனுமதி பெறாததை காரணம்காட்டி நடவடிக்கை எடுப்பதும் போன்ற நடவடிக்கைகளில் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஈடுபடுவதற்கு பெரும் உந்துதலாக இருந்திருக்கிறார். பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது விதிமீறல்களுக்காகவும், ஊழல் நடவடிக்கைகளுக்காகவும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதற்கான மேல் நடவடிக்கை இல்லை.
ஒன்றிய பாஜக அரசின் ஊதுகுழலாக இருந்து வரும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது, பல்கலைக்கழக வேந்தராகியுள்ள தமிழக முதல்வர் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும். பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தனது பணிக்காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதை பழனிச்சாமி தலைமையிலான விசாரணை குழு உறுதி செய்து அரசிடம் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் மீது இன்றுவரை ஆளுநர் எவ்வித நடவடிக்கை எடுக்கவும் அனுமதி வழங்கவில்லை. இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் முன்னாள் பதிவாளர் தங்கவேலுவை கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post விதிமீறல், ஊழல்களுக்காக வழக்குப்பதிவு; சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை: வேந்தராகியுள்ள முதல்வருக்கு திவிக கோரிக்கை appeared first on Dinakaran.
