×

அமெரிக்காவில் இருந்து தீவிரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடுகடத்தல்!!

டெல்லி: அமெரிக்காவில் இருந்து தீவிரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அமெரிக்காவில் இருந்து தஹாவூர் ராணா, விமானத்தில் ஏற்றப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தஹாவூர் ராணா. அமெரிக்காவில் தங்கியிருந்த தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது. நாடுகடத்தலை எதிர்த்து தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதை தொடர்ந்து நாடு கடத்தப்பட்டார். தஹாவூர் ராணா நாளை இந்தியா கொண்டு வரப்பட்டவுடன் மும்பை அல்லது டெல்லி சிறையில் அடைக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

The post அமெரிக்காவில் இருந்து தீவிரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடுகடத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Tahavor Rana ,America ,India ,Delhi ,2008 Mumbai terror attacks ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...