×

சென்னையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் (93)வயது மூப்பு காரணமாக காலமானார்

சென்னை: தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான காங்கிரஸ் மூத்த தலைவரும், பாஜக தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன்(93) வயது மூப்பு காரணமாக காலமானார். சென்னை விருகம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

அப்பாவை இழந்து தவிக்கிறேன், ‘போய் வாருங்கள் அப்பா’. தமிழ் மொழியையும், தேசியத்தையும், காந்தியத்தையும் வாழ்க்கை முறையாக கொண்டிருந்தவர் எனது தந்தை காமராஜரின் தொண்டர் என்பது தான் தமது அடையாளம் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். நான் வேறு இயக்கத்தில் பயணித்தாலும், நன்றாக இருக்க வேண்டும் என வாழ்த்தியவர் எனது தந்தை. தமிழக மக்களுக்கு எனது தந்தை செய்ய நினைத்ததை, நாங்கள் செய்து முடிப்போம்.

தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை… தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று…. பெருமையாக . பேச வைத்த என் தந்தை திரு.குமரி அனந்தன் அவர்கள்… இன்று என் அம்மாவோடு.. இரண்டர கலந்து விட்டார்… குமரியில்.. ஒரு கிராமத்தில் பிறந்து.. தன் முழு முயற்சியினால்… அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக… தமிழ் மீது.. தீராத பற்று கொண்டு… தமிழிசை என்ற பெயர் வைத்து… இசை இசை… என்று கூப்பிடும் என் அப்பாவின்… கணீர் குரல்… இன்று காற்றில்.. இசையோடு கலந்து விட்டது…. வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று… சீரான வாழ்க்கை வாழ்ந்தவர்… இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம்… சீராக வாழ்வதைக் கண்டு… பெருமைப்பட்டு.. வாழ்த்திவிட்டு.. எங்களை விட்டு மறைந்திருக்கிறார்… என்றும். .. அவர் பெயர் நிலைத்திருக்கும். தமிழக அரசியலில்.. பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்…. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா… நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ… அதை மனதில் கொண்டு… உங்கள் பெயரில்… நாங்கள் செய்வோம் என்று… உறுதியோடு… உங்களை வழி அனுப்புகிறோம்… உங்கள் வழி உங்கள் வழியில்…… நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல… நாமும் மகிழ்ச்சியாக இருந்து.. மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும்.. என்று உங்கள் ஆசை ஆசையை.. எப்போதும் நிறைவேற்றுவோம்… போய் வாருங்கள் அப்பா தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன்… நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்… என தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் தள பதிவில் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

The post சென்னையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் (93)வயது மூப்பு காரணமாக காலமானார் appeared first on Dinakaran.

Tags : Congress ,Kumari Ananthan ,Chennai ,Tamil Nadu ,BJP ,Tamilisai Soundararajan ,Virugambakkam, Chennai ,Senior ,
× RELATED டபுள் டெக்கர் பேருந்து சேவையை இன்று...