×

களக்காடு அருகே வீடு புகுந்து நகை திருட்டு

களக்காடு, ஏப்.9: களக்காடு அருகே உள்ள கீழக்கட்டளை, நாராயணசுவாமி கோயில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி ஜெயலதா(47). கடந்த 27ம் தேதி ஜெயலதா ஊருக்கு அருகே உள்ள தங்களது தோட்டத்திற்கு சென்று விட்டார்.

வீட்டில் இருந்த அவரது தாயாரும் டோனாவூருக்கு புறப்பட்டு சென்று விட்டார். வீடு பூட்டப்படாமல் திறந்து கிடந்துள்ளது. இதைநோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து அங்கு மேஜையில் ஒரு டப்பாவில் வைக்கப்பட்டிருந்த 3 கிராம் எடையுள்ள தங்ககம்மலை திருடி சென்று விட்டனர். தோட்டத்திற்கு சென்ற ஜெயலதா திரும்பி வந்து பார்த்த போது, கம்மல் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அதில் எதிர்வீட்டை சேர்ந்த ஒரு பெண் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து, தங்க கம்மலை திருடிய நபர்களை தேடி வருகிறார்.

The post களக்காடு அருகே வீடு புகுந்து நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Kalakkadu ,Krishnan ,Jayalatha ,Narayanaswamy Temple Street, Keezhakattala ,Donavur ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை