- தகட்டூர் மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் கோவில்
- வேதாரண்யம்
- தகட்டூர் மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் கோவில் திருவிழா
- வேதாரண்யம் தாலுகா
- தகட்டூர் மாப்பிள்ளை
- வீரன் திருமேனி அம்மன்
- கோவில்
வேதாரண்யம், ஏப். 9: வேதாரண்யம் தாலுகா தகட்டூர் மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் கோவில் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது நாள்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வீதி உலா நடைபெற்றது. நேற்று கோவிலின் முக்கிய திருவிழாவான வாழைப்பழத்தை பக்தர்கள் மீது வீசும் வினோத திருவிழா நடைபெற்றது. முன்னதாக தகட்டூர் பைரவ நாத சுவாமி ஆலயத்திலிருந்து கப்பரை எடுத்து வரப்பட்டது. சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை எடுத்து வரப்பட்டு கோவிலை வலம் வந்து பின்பு வாழைப்பழம் வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது வீசப்பட்ட வாழைப்பழங்களை பிடித்து எடுத்து சென்றனர். நிகழ்ச்சியில் வாழைப்பழத்தை பிடித்து உண்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதனை தொடர்ந்து குதிரை எடுத்தல் நிகழ்ச்சியும் இரவு சுவாமி வீதி உலா காட்சியும் தேரோட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆலய வளாகத்தில் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை நிவர்த்தி செய்ய ஆயிரக்கணக்கான உருவபொம்மைகளை வாங்கி வைத்து விளக்கேற்றி வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வாய்மேடு போலீசார் செய்திருந்தனர்.
The post தகட்டூர் மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் கோவிலில் பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் விநோத திருவிழா appeared first on Dinakaran.
