×

திருத்தங்கல் மண்டலத்தில் திறப்பு மகளிர் சுகாதார வளாகம்

சிவகாசி, ஏப்.9: திருத்தங்கல் மண்டலத்தில் மகளிர் சுகாதார வளாகத்தை திமுக கவுன்சிலர் அ.செல்வம் திறந்து வைத்தார்.  சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் மண்டலத்தில் 1வது வார்டில் சுகாதார வளாகங்களை மராமத்து செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அந்த பகுதி திமுக கவுன்சிலரும் 1வது வார்டு திமுக பகுதி கழக செயலாளருமான அ.செல்வம் மாநகராட்சி நிர்வாகத்தில் தொடர்ந்து வலியுறுத்தினார்.

அதனை தொடர்ந்து சுக்ரவார்பட்டி ரோடு பகுதியில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் மராமத்து பணிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்தது. சுகாதார வளாகத்தில் கடந்த சில மாதங்களாக மராமத்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அந்த பகுதி திமுக கவுன்சிலர் அ.செல்வம் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர். மகளிர் சுகாதார வளாகம் திறக்கப்பட்டதால் வார்டு பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post திருத்தங்கல் மண்டலத்தில் திறப்பு மகளிர் சுகாதார வளாகம் appeared first on Dinakaran.

Tags : Women's Health Complex ,Territhangal Zone ,Sivakasi ,Thiruthangal Zone ,Dimuka ,Councillor ,A. Wealth ,Sivakasi Municipality ,1st Ward Health ,Complexes ,Women's ,Health Campus ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை