×

ஒன்றிய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

 

திருப்பூர், ஏப்.9: புதிய வக்பு சட்டத்தை அமல்படுத்திய ஒன்றிய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிபி சந்தர், முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் சுசி.கலையரசன், மண்டல துணை செயலாளர் ஜாபர் அலி, தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், கிழக்கு மாவட்ட செயலாளர் மின்னல், வடக்கு மாவட்ட செயலாளர் பழ.சண்முகம், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் துரைவளவன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்தும், புதிய வக்பு சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதில், திரளானோர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Viduthalai Siruthaigal ,Union government ,Tiruppur ,Tiruppur Collector ,Metropolitan ,District ,President ,Murthy… ,Viduthalai ,Siruthaigal ,
× RELATED ரயிலில் கேட்பாரற்று கிடந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல்