×

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

 

தொண்டி, ஏப்.9: தொண்டி மேற்கு அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தொண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமையில் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் ஜெயந்தன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி ரோசானியா மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் புல்லாணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார்.

The post அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Thondi ,Thondi West Government Primary School ,Panchayat Union West Primary School ,Shanthi ,Parents Teachers Association… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை