×

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

 

ஊட்டி, ஏப்.9: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ்பார்க் அருகே அமைந்துள்ள குன்னூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் 11ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நீலகிரி மின்பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமை வகிக்கிறார்.

அப்போது குன்னூர் நகரம், சிம்ஸ்பார்க், மவுண்ட்ரோடு, மவுண்ட் பிளாசண்ட், எடப்பள்ளி, பேரக்ஸ், கிளண்டேல், சேலாஸ், உபதலை, குந்தா, ஆருகுச்சி, எடக்காடு, அதிகரட்டி, கோத்தகிரி நகரம், அரவேணு, வெஸ்ட்புரூக், கட்டபெட்டு, கீழ்கோத்தகிரி, நெடுகுளா, கோத்தகிரி கிராமியம் பிரிவு அலுவலகத்தை சார்ந்த மின் நுகர்வோர்கள் தங்கள் மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் நோில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

The post மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Coonoor Executive Engineer's Office ,Simspark, Coonoor, Nilgiris district ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி