×

வக்பு வாரிய திருத்த சட்டம் தொடர்பான வழக்குகள் வரும் 15ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: கடந்த வாரம் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திருத்தப்பட்ட வக்பு வாரிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது சட்டமாக உள்ளது. இதையடுத்து ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் 12க்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இந்த மனுக்கள் அனைத்தையும் அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் அனைத்தையும் பரிசீலனை செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு, வக்பு வாரிய திருத்த சட்டம் தொடர்பான வழக்குகள் வரும் 15ம் தேதி பட்டியலிட்டு விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.

The post வக்பு வாரிய திருத்த சட்டம் தொடர்பான வழக்குகள் வரும் 15ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Lok Sabha ,Rajya Sabha ,Dinakaran ,
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...