×

பிரம்மகுமாரிகள் தலைவர் தாதி தத்தன்மோகினி காலமானார்

ஜெய்ப்பூர்: பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் தலைவரான தாதி ரத்தன் மோகினி 101வது வயதில் காலமானார். பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஐஸ்வரிய விஸ்வவித்யாலயா இயக்கத்தின் தலைவராக தாதி ரத்தன் மோகினி இருந்து வந்தார். இந்நிலையில் வயது முதிர்வால் ஏற்படும் உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் தாதி ரத்தன் மோகினி (101)நேற்று காலமானார்.

அவரது மறைவுக்கு ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பாக்டே மற்றும் முதல்வர் பஜன்லால் சர்மா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரம்மகுமாரிகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரம்ம குமாரிகள் நிர்வாக தலைவராக தாதி ரத்தன்மோகினியின் வாழ்க்கை தெய்வீக அர்ப்பணிப்புக்கு சான்றாக இருந்தது. தாதிஜியின் பயணம் அமைதி, அன்பு மற்றும் ஞானத்தை பரப்புவதற்காக ஒரு நூற்றாண்டுக்கால அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலித்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பிரம்மகுமாரிகள் தலைவர் தாதி தத்தன்மோகினி காலமானார் appeared first on Dinakaran.

Tags : Brahma ,Dadi Thattanmohini ,Jaipur ,Dadi Ratan Mohini ,Brahma Kumaris ,Prajapita ,Brahma Kumaris Aishwarya Vishwavidyalaya Movement ,Ahmedabad… ,
× RELATED மாநில அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு...