- பெண்கள்
- அணி பெயர் வாரியம்
- கிழக்கு மாவட்டம்
- தவெகா சென்னை
- சென்னை
- தமிழ்நாடு வெற்றி கிளப்
- சென்னை கிழக்கு
- மாவட்டம் அம்பத்தூர் சட்டமன்றத் தொ
- 86வது வார்டு மனூர் பட்டா
- பிள்ளையார் கோயில் தெரு
- நெரு நகர்
- பெருமாள் கோயில் தெரு
- பெண்கள் அணி பெயர் வாரியம் திறப்பு
- சென்னை கிழக்கு மாவட்டம் டவேக
- தின மலர்

சென்னை: தமிழக வெற்றி கழக சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 86வது வார்டு மண்ணூர் பேட்டை, பிள்ளையார் கோயில் தெரு, நேருநகர், பெருமாள் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மகளிரணியின் 3 பெயர் பலகைகள் திறப்பு விழா மற்றும் விலையில்லா ரொட்டி, பால் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் ஜி.பாலமுருகன் கலந்துகொண்டு, மகளிர் அணியின் பெயர் பலகையை திறந்து வைத்து விலையில்லா ரொட்டி பால் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.
மேலும் ஏழை, எளியவருக்கு நலத்திட்ட உதவிகள், புடவை மற்றும் அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது. பின்னர், மாற்று கட்சியில் இருந்து 200க்கும் மேற்பட்ட மகளிர் தங்களை தவெகவில் இணைத்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை 86வது வார்டு பொறுப்பாளர் வ.லிங்கேஷ் ஏற்பாடு செய்திருந்தார். கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர். பெயர் பலகையை மகளிர் அணியினரை திறந்து வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
The post தவெக சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் 3 இடங்களில் மகளிர் அணி பெயர் பலகை திறப்பு விழா appeared first on Dinakaran.
