×

புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியம் அமைக்கும் முதல் மாநிலம் கேரளா

கேரளா: புதிதாக நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கேரளா தற்போது இந்த சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது. கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம் புதிய சட்டம் அமலுக்கு வரும் முன்னரே முடிவடைந்ததால் புதிய வாரியத்தை புதிய சட்டத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டியது கட்டாயமாகியுள்ளது. எனினும் வெளியேறும் வாரியத்தின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் 19ம் தேதி முடிவடைந்துவிட்டது. புதிய வாரியத்தைத் தேர்ந்தெடுக்கும் பணி பழைய சட்டத்தின் கீழ் அரசு ஏற்கனவே தொடங்கிய நிலையில் புதிய சட்டத்தின் கீழ் மீண்டும் தேர்வு நடைமுறைகளைத் தொடங்கியுள்ளது.

The post புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியம் அமைக்கும் முதல் மாநிலம் கேரளா appeared first on Dinakaran.

Tags : Kerala ,Wakf Board ,Kerala Waqf Board ,Dinakaran ,
× RELATED சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை மகரஜோதி தரிசனம்..!