×

கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும்: விவசாய சங்க தலைவர் தல்லேவால் பேட்டி

சண்டிகர்: விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க கோரி விவசாயிகள் கடந்த ஆண்டு இரண்டாவது கட்ட போராட்டத்தை தொடங்கினர். விவசாயிகளின் போராட்டத்துக்கு தீர்வு காண விவசாயிகளுடன் ஒன்றிய அரசு 7 கட்டமாக நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்-அரியானா எல்லையில் உள்ள ஷம்புவில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

கடந்த மாதம் எல்லையில் போடப்பட்டிருந்த விவசாயிகளின் கூடாரங்களை போலீசார் அகற்றினர். கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த சம்யுக்த கிசான் மோர்ச்சா ஒருங்கிணைப்பாளர் ஜகஜித் சிங் தல்லேவால் நேற்றுமுன்தினம் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.

இந்த நிலையில் நேற்று அவர் கூறுகையில்,‘‘ குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும். அடுத்த மாதம் 4ம் தேதி ஒன்றிய அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்பார்கள்.இதில் எங்களுடைய கோரிக்கைகளை வலுவாக எடுத்து வைக்கப்படும்’’ என்றார்.

The post கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும்: விவசாய சங்க தலைவர் தல்லேவால் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Farmers' Association ,President ,Thallewal ,Chandigarh ,Union government ,
× RELATED டெல்லியில் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்தது போலீஸ்!