×

வலங்கைமான் தாலுகாவில் 8000 ஏக்கரில் கோடை சாகுபடி பணிகள் தீவிரம்

வலங்கைமான் : வலங்கைமான் தாலுக்காவில், கோடை சாகுபடியாக 8000 ஏக்கர் வரை நெல் பயிரடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.வலங்கைமான் தாலுக்காவில் உள்ளவருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு வெட்டாறு வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளன் ஆறு மூலம் பாசன வசதி பெறுகின்றது.

சுமார் 14 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்ள பட்டு அறுவடைப் பணிகள் முடிவுற்றுள்ள நிலையில் கோடை சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளதுவலங்கைமான் தாலுக்காவில் உள்ள வருவாய் கிராமங்களில் கடந்த ஆண்டு சுமார் பத்தாயிரம் ஏக்கரில் கோடை நெல் சாகுபடி நடைபெற்றது.

நடப்பு ஆண்டில் வலங்கைமான் மற்றும் ஆதிச்சமங்கலம், சந்திரசேகரபுரம் கோவிந்தகுடி மருவத்தூர் மேல விடையல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சுமார் 8ஆயிரம் ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறுகிய கால நெல் ரகங்களான கோ 51 உள்ளிட்ட நெல் ரகங்களை நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.சம்பா சாகுபடி போன்று இயந்திர நடவு, கை நடவு மற்றும் நேரடி விதைப்பு முறைகளில்கோடை பட்டத்தில் நெல் சாகுபடியினை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பா பட்டத்தில் புழுதி உழவு மேற்கொண்டு நேரடி விதைப்பு செய்யப்படுவர் மாறாக தற்போது சேற்று உழவு செய்து நேரடி விதைப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோடை பட்டத்தில் நெல் சாகுபடி வலங்கைமான் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது.

The post வலங்கைமான் தாலுகாவில் 8000 ஏக்கரில் கோடை சாகுபடி பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Valangaiman Taluga ,Valangaiman ,Valangaiman Taluka ,Varavai Villages ,Kudamuruti ,
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...