- திருப்பதி வேத பல்கலைக்கழகம்
- திருமலா
- ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழகம்
- திருப்பதி மலை
- ஸ்ரீ வெங்கடேஸ்வர பல்கலைக்கழகம்
திருமலை: திருப்பதி வேத பல்கலைக்கழகத்தில் சுற்றிய சிறுத்தை வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது. திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழகம், ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தை சுற்றி அவ்வப்போது சிறுத்தை நடமாடி அங்குள்ள தெரு நாய்களை வேட்டையாடி வந்தது. இதனால் வனத்துறை அதிகாரிகள் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தை அதிகமாக வந்து செல்லும் இடங்களில் கூண்டு வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை வேத பல்கலைக்கழகம் அருகே ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கியது.
இதையறிந்த வனத்துறை அதிகாரிகள் உடனடியாக அங்கு வந்து சிறுத்தையை கூண்டுடன் மீட்டு திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர். தொடர் கண்காணிப்புக்கு பிறகு அதனை அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுத்தை நடமாட்டத்தால் கடந்த சில மாதங்களாக இரவு 7 மணிக்கு மேல் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், விடுதியில் தங்கி இருப்பவர்கள் வெளியே வர வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இந்நிலையில் சிறுத்தை கூண்டில் பிடிபட்டதால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
The post திருப்பதி வேத பல்கலைக்கழகத்தில் சுற்றிய சிறுத்தை கூண்டில் சிக்கியது appeared first on Dinakaran.
