×

தர்பூசணியில் ரசாயன கலப்பு விவகாரம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி திடீரென பணியிட மாற்றம்

சென்னை: சென்னையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார், திடீரென தமிழ்நாடு மருந்து நிர்வாகத்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார், பல உணவகங்களில் அதிரடி சோதனை செய்தார். இதில், உணவு தரமாக இல்லை என கூறி அந்தந்த உணவகங்களுக்கு சீல் வைத்துள்ளார். மேலும் அவர், பொதுமக்கள் எவ்வாறு உணவு சாப்பிட வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் கோடை காலத்தில் தர்பூசணி உள்ளிட்ட பல்வேறு பழங்களை பொதுமக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இவற்றில் தர்பூசணி விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அவற்றின் தரத்தை அறிய சோதனையில் இறங்கினர். அப்போது, சில கடைகளில் தர்பூசணிகளை சோதனை செய்து அந்த பழங்களை அகற்றினர். இதற்கு காரணம், அந்த பழங்களில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதால் அகற்றப்பட்டதாக தகவல்கள் பரவியது. இதனால் பொதுமக்களிடையே அச்சம் பரவியது.

தர்பூசணி வாங்குவதையோ, சாப்பிடுவதையோ தவிர்த்தனர். இதனால், விவசாயிகளும் கூலி தொழிலாளர்களும் பெரும் பாதிப்படைந்தனர். இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார், திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பணியிட மாற்றம் செய்யப்பட்ட சதீஷ் குமார், தமிழ்நாடு மருந்து நிர்வாக துறைக்கு (டிஎம்எஸ்) மாற்றப்பட்டுள்ளார் என்றும், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாபு துறை அதிகாரி போஸ் கூடுதலாக சென்னை மாவட்ட பொறுப்புக்களை கவனிப்பார் என்றும் சுகாதார துறை சார்பில் தகவல் தெரிவித்துள்ளது.

The post தர்பூசணியில் ரசாயன கலப்பு விவகாரம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி திடீரென பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Food Safety Department ,Chennai ,Chennai, ,Satish Kumar ,Tamil Nadu Drug Administration ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...