- தெற்கு ரயில்வே
- தாம்பரம்
- செங்கல்பட்டு
- மேல்மருவத்தூர்
- விழுப்புரம்
- விருத்தாச்சலம்
- அரியலூர்
- ரங்கம்
- திருச்சி
- திண்டுக்கல்

நெல்லை: தென்மாவட்டங்களில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களின் சேவையை தெற்கு ரயில்வே பயணிகளின் தேவைக்கேற்ப நீட்டிப்பு செய்து வருகிறது. அந்த வகையில் தாம்பரம் – திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரயிலானது, செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ரெங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, வில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை வழியாக திருவனந்தபுரம் (கொச்சுவேலி) வடக்கிற்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தாம்பரம் – திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரயிலுக்கான (எண்.06035) சேவை நேற்று 4ம் தேதியோடு நிறைவு பெற்றது. எனவே இந்த ரயிலின் சேவையை மேலும் ஒரு மாத காலம் நீட்டிப்பு செய்ய முடிவெடுத்துள்ளது.
அதன்படி வரும் 11ம் தேதி முதல் அடுத்த மே மாதம் 2ம் தேதி வரை இந்த ரயிலின் சேவை நீட்டிப்பு செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக திருவனந்தபுரம்- தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயிலின் (எண்.06036) சேவை நாளை 6ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இந்த ரயிலின் சேவையை வரும் 13ம் தேதி முதல் வரும் மே மாதம் 4ம் தேதி வரை தெற்கு ரயில்வே நீட்டிப்பு செய்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும், திருவனந்தபுரம் வடக்கில் இருந்து ஞாயிற்று கிழமை தோறும் புறப்பட்டு செல்கின்றன. இரு மார்க்கத்திலும் மேலும் ஒரு மாத காலத்திற்கு ரயில்களின் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post தாம்பரம் – திருவனந்தபுரம் ரயில் ஒரு மாத காலத்திற்கு நீட்டிப்பு appeared first on Dinakaran.
