×

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

பப்புவா நியூ கினியா: பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்குள்ள கடற்கரை பகுதிகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கிலோமீட்டர் (ஆறு மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ஒன்று முதல் மூன்று மீட்டர் வரை சுனாமி அலைகளை உருவாக்கும் என்று அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு வாழும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ள நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு! appeared first on Dinakaran.

Tags : POWERFUL EARTHQUAKE ,PAPUA NEW GUINEA ,TSUNAMI WARNING HOLIDAY ,TSUNAMI ,southwestern Pacific Ocean ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...