- வீரபாண்டியில் விழிப்புணர்வு பேரணி
- டெனி
- மேயர்
- ஷெர்மன் கீதசாசி
- மாநில கலை அறிவியல் கல்லூரி
- வீரபாண்டி
- பிறகு நான்
- மாநில கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்து வீரபாண்டியில் வி
- தின மலர்
தேனி, ஏப். 5: தேனி அருகே வீரபாண்டியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதை பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பேரணியை பேரூராட்சி சேர்மன் கீதாசசி துவக்கி வைத்தார். தேனி அருகே வீரபாண்டியில் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் மாணவ – மாணவியர் சார்பில் போதைப் பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
இப்பேரணியை வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதாசசி கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போதை பொருளை தவிர்க்க வேண்டிய தன் அவசியம் குறித்தும் சேர்மன் கீதாசசி விளக்கிப் பேசினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி ஆசிரியர்கள் மாணவ மாணவியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post போதை பொருள் ஒழிப்பு குறித்து வீரபாண்டியில் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.
