- நிறைவேற்றுக் குழு கூட்டம்
- சிவகங்கை
- தமிழ் சங்கம்
- முருகானந்தம்
- தமிழ்ச்செம்மல் பகீரத நாச்சியப்பன்
- பாண்டியராஜன்
- தின மலர்
சிவகங்கை, ஏப். 5: சிவகங்கையில் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் தமிழ்ச்செம்மல் பகீரத நாச்சியப்பன் முன்னிலை வகித்தார். செயலாளர் பாண்டியராஜன் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார். இதில் சிவகங்கை ஒன்றிய அளவில் 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 100% மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கும், பயிற்றுவித்த தமிழாசிரியர்களுக்கும் பாராட்டும், விருதும் வழங்குவது.
1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ் ஆர்வத்தை உண்டாக்கும் வகையில் \”கதை சொல்லும் போட்டி\” நடத்தப்பட்டு பரிசுகள் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர் இதில் ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், முன்னாள் செயலாளர்கள் முத்துப்பாண்டியன், ராமச்சந்திரன் கலந்து கொண்டனர். பொருளாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.
The post நிர்வாகக்குழு கூட்டம் appeared first on Dinakaran.
