- தேசிய நல திட்ட முகாம்
- நத்தம் முலையூர்
- நத்தம்
- நாட்டு நலப்பணித் திட்டம்
- முளையூர்
- உலுப்பக்குடி
- மாவட்ட மருத்துவ அலுவலர்
- மாலா
- திட்ட ஒருங்கிணைப்பாளர்
- சுந்தரராஜ்…
- தின மலர்
நத்தம், ஏப். 5: நத்தம் அருகே முளையூரில் தனியார் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது. உலுப்பகுடி வட்டார மருத்துவ அலுவலர் மாலா ஆலோசனையின் பேரில் நடந்த இந்த முகாமில் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜ் வரவேற்று பேசினார்.
இதில் மருத்துவமனை ஆலோசகர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு எய்ட்ஸ், காச நோய், பால்வினை நோய் குறித்து கிராமமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்து மணிகண்டன் நன்றி கூறினார். இதில் நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post நத்தம் முளையூரில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் appeared first on Dinakaran.
