×

ஆதார், குடும்ப அட்டை நகல் கொடுத்து ஆவின் பால் கார்டு பெற்றுக்கொள்ளலாம்

தஞ்சாவூர்,ஏப்.4: தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆதார், குடும்ப அட்டை நகல் கொடுத்து ஆவின் பால்கார்டு பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொது மேலாளர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், அனைத்து ஆவின் பால் முகவர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் கீழ் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வருகிறது. மாவட்டங்களில் நாகை, ஆகிய இயங்கி இந்த உள்ள நுகர்வோர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு 500 மி.லி, 250 மி.லி போன்ற அளவுள்ள ஆவின் பால் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு விற்பனை செய்யப்படும் வகைகளுக்கு பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.1 தள்ளுபடி நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பால்கார்டு வினியோகிக்கும் போது அனைத்து வித நுகர்வோர்களிடம் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு பால்கார்டுகளை வழங்கிட ஒன்றிய பொது மேலாளர் மற்றும் துணை பதிவாளர் (பால்வளம்) அறிவுறுத்தி உள்ளார். இதனை கருத்தில் கொண்டு கடந்த 1ம் தேதி முதல் மேற்படி பால் வகைகளின் கார்டு பெற்றுக்கொள்வதற்கு நுகர்வோர்களின் ஆதார் கார்டு அல்லது குடும்ப அட்டை நகலினை பால் கூட்டுறவு ஒன்றியத்தில் சமர்ப்பித்து பால்கார்டுகளை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஒரு ஆதார் அட்டைக்கு ½ லிட்டர் பாலும், ஒரு குடும்ப அட்டைக்கு 1 லிட்டர் பால் மட்டுமே வழங்க இயலும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஆதார், குடும்ப அட்டை நகல் கொடுத்து ஆவின் பால் கார்டு பெற்றுக்கொள்ளலாம் appeared first on Dinakaran.

Tags : Aavin ,Aadhaar ,Thanjavur ,District Cooperative Milk Producers Union ,General Manager ,Saravanakumar ,Nagapattinam ,Thiruvarur ,Mayiladuthurai ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை